கோவையில் கடந்த ஆண்டு கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த கார்வெடிப்பில் உயிரிழந்த மூபின் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்த 190 கிலோ வெடிபொருட்களை வாங்கியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்த குற்றப்பத்திரிகையில், மூபின மற்றும் அவரது உறவினர்கள் இருவர் 190 கிலோ வெடிமருந்துகளை அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலமாகவும், உள்ளூர் ரசாயன வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம், பென்சால்டிஹைட் டைமெத்தில் அசெட்டல் ஆகிய வேதிப்பொருட்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூபினின் வாட்ஸ்அப் புகைப்படத்தில், தனது மரணச் செய்தியை பெறும் போது, குறைகளை மன்னிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.