தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொட்டியான் குளத்தில் சட்டத்திற்கு புறம்பாக மண் எடுத்து குடியிருப்புகள் கட்டுவதற்காக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மே 16 முதல் 18ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு பதிலாக, ஆலங்குளத்தை சேர்ந்த சிலர் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மண் எடுத்து டிராக்டர்களில் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.
மூன்று அடி வரை மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 10 முதல் 15 அடி வரை தோண்டி அவர்கள் மண்ணை அள்ளி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொண்டுச் செல்லப்படும் மண் யூனிட் ஒன்றுக்கு 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.