தமிழகம் முழுவதும் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுளனர்.
கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. மொத்தமாக 7 லட்சத்து 76 ஆயிரத்து 844 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சத்து 6 ஆயிரத்து 413 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
96.38 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும் 96.18 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும் 95.73 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தைப் போலவே இதிலும் 82.58 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.