தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வை மொத்தம் 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 6.50 விழுக்காடு கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆயிரத்து 26 அரசுப் பள்ளிகளோடு சேர்த்து மொத்தம் 3 ஆயிரத்து 718 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை எட்டியுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் 97.67 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடத்தையும் சிவகங்கை மாவட்டம் 97.53 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் 2ஆம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் 96.22 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 விழுக்காடு தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் வந்துள்ளது.