விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொழிற்சாலைகளில் பயன்படும் மெத்தனால் கலந்த விஷசாராயத்தை அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமனம் செய்யப்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார், மெத்தனாலை வழங்கிய தனியார் ரசாயன தொழிற்சாலை உரிமையாளர் இளையநம்பி, அதனை விற்பனை செய்த வியாபாரி உட்பட 17 பேரை கைது செய்து கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட வழக்குகளை விசாரிக்க ஏடிஎஸ்பி கோமதியும், செங்கல்பட்டு மாவட்ட வழக்குகளை விசாரிக்க ஏடிஎஸ்பி மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.