செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காரில் வந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த கைகளுக்கு போலீசாரின் தரமான மாவுக்கட்டு..!

May 17, 2023 02:24:29 PM

கோவையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகைபறிக்க முயன்ற ஸ்விக்கி ஊழியரையும், கார் ஓட்டுனரையும் கைது செய்த போலீசார் கால் டாக்ஸியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கொள்ளையர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கவுசல்யா என்ற பெண்ணிடம் காரில் வந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

நம்பர் இல்லாத காரின் பக்கவாட்டில் ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் வண்ண ஸ்டிக்கரை அடையாளமாக வைத்து காரை தேடி வந்தனர். அந்த கார், கொள்ளை முயற்சிக்கு முன்பாக எங்கிருந்து வந்தது என்பதை ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளாக சேகரித்து ஆய்வு செய்தனர்.

இதில் அந்த வெள்ளை நிற மாருதி சுசுகி சுவிப்ட் டிசயர் கார் சென்னை விமான நிலைய பகுதிகளில் கால் டாக்ஸியாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தர்மபுரியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் சக்திவேலை தூக்கிய போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடன் காரில் சென்று தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியரான திருவண்ணாமலையை சேர்ந்த அபிசேக் என்பவரையும் மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் கொள்ளை முயற்சி குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய இருவரும் வழுக்கி விழுந்ததால் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார் , மனித நேயத்துடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செயின் பறித்த கைகளுக்கு தரமான முறையில் மாவுக்கட்டு போட்டுவிட்டனர்.

கடந்த 7 வருடங்களாக நட்பில் உள்ள இவர்கள் இருவரும் சேர்ந்து போலீசில் மாட்டிக் கொள்ளாமல் தங்க சங்கிலி பறிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி சம்பவத்தன்று காரின் இருபக்கம் உள்ள நம்பர் பிளேட்டுகளையும் கழட்டிவிட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களது காரில் ஒட்டியிருந்த சில ஸ்டிக்கர்கள் அவர்களை அடையாளம் காட்டிவிட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல், அபிசேக் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிசிடிவி காட்சி இல்லையென்றால் இந்த வழக்கில் துப்பு துலக்கி இருக்க முடியாது என்று குறிப்பிட்ட போலீசார் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சிசிடிவி பொறுத்துவது கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், கொள்ளையர்களை அடையாளம் காணவும் உதவும் என்று சுட்டிக்காட்டினர்.


Advertisement
திருவாரூரில் தொடரும் மழையால் விளைநிலங்கள் பாதிப்பு..
அடியோடு சாய்ந்த மரம் கூடவே விழுந்த மின்கம்பம்... பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கடல் சீற்றத்தால் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைப்பு
நாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பா.ம.க.வினர் 29 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம் அருகே, சாலையிலேயே அடித்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - புதுச்சேரி ஆட்சியர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையை அடுத்து தேசியப் பேரிடர் மீட்புக் குழு மூலம் இன்று முதல் மீட்புப் பணி ஆரம்பம்...
நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் தீவிரம்
டேனிஷ் கோட்டை அருகே கடல் சீற்றம் அதிகரிப்பு, கல் சுவர் அமைக்க கோரிக்கை

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement