செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கள்ளச்சாராய வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றப்படும்: முதலமைச்சர்

May 15, 2023 07:07:19 PM

கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து, கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக அமைச்சர்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர், டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை ஊற்றி விற்றதால் துயர சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறினார்.

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என முதலமைச்சர் வருவதற்கு முன் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், கள்ளச்சாரயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக வழிமுறைகள் உள்ளதாகவும், பதற்றத்தில் உறவினர்கள் குற்றம்சாட்டுவதாகவும் விளக்கினார்.

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு முதலமைச்சர் திரும்பிய வழியில், மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார். இதனிடையே இந்நிலையில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவையும், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பிக்களையும் பணியிடை நீக்கம் செய்யவும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பை பணியிட மாற்றம் செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.


Advertisement
தேன்கனிக்கோட்டை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறையினருடன் ஆட்சியர்ஆலோசனை
சிதிலமடைந்து காணப்படும் கிராம ஊராட்சி நீர்த் தேக்கத் தொட்டி
கார் நிறுத்தும் இடத்தில் கட்டுமானப் பொருட்களை கொட்டியதால் ஆத்திரம்
கிணறு ஆழப்படுத்தும் போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு
போலி தங்க நகையை அடகு வைக்க முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு
கடல் சீற்றம் காரணமாக கரையில் நிறுத்தப்பட்ட மீன்பிடி படகுகள்
திருவண்ணாமலையில் விஷ உணவை சாப்பிட்டு உயிருக்கு போராடிய தெருநாய்
வி.சி.கவினர் தன்னை தாக்கியதாக இன்ஸ்டா பிரபலம் "வணக்கம்டா மாப்பிள்ளை அருண்குமார்" புகார்
திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் மாடுகள் மற்றும் நாய்களால் தொல்லை.. நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

Advertisement
Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்


Advertisement