தேனி மாவட்டம் வீரபாண்டி கோவில் திருவிழாவின் போது ராட்டினத்தில் ஏற வந்த பெண்களை கேலி செய்த ராட்டின ஆபரேட்டரை தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 6-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.திருவிழாவுக்கு வந்த சின்னமனூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை ராட்டின ஊழியர்கள் கேலி செய்துள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் உறவினர்களுடன் அங்கிருந்த ராட்டின ஊழியர்கள் ஒன்றிணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருட்களால் சரமாரி தாக்கி சண்டையிட்டுள்ளனர்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரித்து வருகின்றனர்.