தி கேரளா ஸ்டோரி படத்தைத் திரையிட ஏன் அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசும் மேற்குவங்க அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக அப்படத்துக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 நாடுகளில் அப்படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டில் அப்படம் திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் திரையரங்குகளுக்கு காவல்துறையால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது.
திரையரங்குகள் தாக்கப்பட்டு நாற்காலிகள் உடைக்கப்பட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மே 17 ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டனர்.