செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பரவச உலகத்தில் குளோரின் நீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி..! தீம் பார்க் செல்லும் பெற்றோரே உஷார்

May 12, 2023 09:00:30 AM

சேலம் அருகே உள்ள பரவச உலகம் தீம்பார்க்கில் பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாச்சென்ற 13 வயது சிறுவன் குளோரின் அதிகமாக கலக்கப்பட்ட நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் மல்லூரில் அமைந்துள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் தான் இந்த விபரீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் கிச்சிப்பாளையத்தில் உணவகம் நடத்திவரும் ரஞ்சித் - உஷா தம்பதியருக்கு சவுடேஸ்வரன் , துவேஸ்வரன் ஆகிய இருமகன்கள் இருந்தனர். பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த தங்களது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு இந்த தம்பதியினர் பரவசம் உலகம் தீப்பார்க்கிறகு சென்றனர். காலையில் அந்த பொழுது போக்கு பூங்காவில் உள்ள தண்ணீர் விளையாட்டு பகுதியில் மேலிருந்து தண்ணீருக்குள் சறுக்கி விளையாடி உள்ளனர்.

அந்த நீச்சல் குளத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் குளோரின் அளவுக்கதிகமாக கலக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. சிறிது நேரம் சறுக்கி விளையாடி ஜாலியாக பொழுதை கழித்த சிறுவர்களில் 13 வயது சிறுவனான சவுடேஸ்வரன் திடீர் என மயங்கி நீரில் மூழ்கியதாகவும், அருகில் யாரும் இல்லாததால் அவனை பிடித்து கைத்தூக்கிவிட ஆளில்லை என்று கூறப்படுகின்றது.

தங்கள் மகன் நீரில் மூழ்கியதை அறிந்த பெற்றோர் அவனை தூக்கி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். சவுடேஸ்வரனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தும் சுய நினைவு திரும்பாததால் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கும் தூக்கிச் சென்றனர். சிறுவன் சவுடேஸ்வரனை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நீரில் விளையாடச்சென்ற தங்கள் வீட்டுப் பிள்ளை சடலமாக வருவதை கண்டு உற்றார் உறவினர்கள் கலங்கி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இரு பிள்ளைகளுக்கும் சாமி பெயர் விட்டதாகவும், எந்த சாமியும் வந்து காப்பாற்றவில்லையே என்று விரக்தியோடு கண்ணீர் விட்டனர்.

பரவச உலகம் பூங்காவில் போதிய பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டிய பெற்றோர், தங்கள் மகன் குளித்த இடத்தில் ஆழம் இல்லை எனவும் 3 அடி உயரத்துக்கும் குறைவாகத் தான் தண்ணீர் இருந்ததாகவும் , நீரில் அளவுக்கதிமாக குளோரின் கலக்கப்பட்டதாலும், அந்த தண்ணீரை குடித்ததால் மயக்கம் அடைந்து தங்கள் மகன் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினர் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பொழுது போக்கு பூங்கா நிர்வாகத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பொழுது போக்கு பூங்காக்களில் உள்ள நீச்சல் குளத்தில் ஏராளமானோர் குளிப்பதால் அந்த தண்ணீர் மூலமாக நோய்கள் பரவக்கூடாது என்பதற்காக குளோரின் உள்ளிட்ட ரசாயணங்கள் கலக்கப்படுவதாகவும், இதில் குளிக்கும் சிறுவர்களுக்கு காதுவலி, தொண்டை வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் என்றும், இந்த குளோரின் தண்ணீரை அதிக அளவு குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிறுவனின் இந்த விபரீத மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement