செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி!

May 08, 2023 08:45:09 PM

தமிழ்நாட்டில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 98.85 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டபடி காலை 10 மணியளவில் அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள், தனித்தேர்வர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

+2 தேர்வை 8 லட்சத்து 03 ஆயிரத்து 385 பேர் எழுதிய நிலையில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன்படி மாணவர்கள் 91.45 விழுக்காட்டினரும் மாணவியர் 96.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 97.85 விழுக்காடு தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

97.79 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் 2ஆம் இடத்தையும் 97.59 விழுக்காடு தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. 87.30 விழுக்காடு தேர்ச்சியுடன் இராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 326 அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 93.76 விழுக்காடாக இருந்த நிலையில், இந்தாண்டு 94.30 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

12ஆம் வகுப்பு தமிழ் மொழிப்பாடத் தேர்வில் 2 பேர் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், ஆங்கில மொழிப்பாடத் தேர்வில் 15 பேர் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தோல்வியடைந்த மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் அடுத்து வரும் தேர்வில் வெற்றியடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். மே 19ஆம் தேதி பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.


Advertisement
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை
மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்
நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை
நேற்று பெய்த கனமழையால் திருச்செந்தூரில் வீடுகளில் புகுந்த மழைநீர் மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்
வயல் வெளியில் உலாவிய முதலை மீட்பு - வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுத்த மக்கள்..
2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்
14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் - இராணுவ வீரர் தலைமறைவு
தமிழக பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டியில் வீரர்கள் மீது சண்டிகர் அணியினர் தாக்குதல்..

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement