திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய இளைஞரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை சிசிடிவி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்த பாபு மற்றும் வி.துறையூரைச் சேர்ந்த சுள்ளான் என்கிற வெங்கடேஷ், அவரது சகோதரர் கணேசன் ஆகியோர் இடையே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் தரிசனம் செய்ய கூட்டி செல்வதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் பாபு மது அருந்தி கொண்டிருக்கும் போது அங்கு வந்த சுள்ளானுடன் மீண்டும் இந்த பிரச்னை குறித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுள்ளான் உள்பட 4பேர் கொண்ட கும்பல் அரிவாளால் பாபுவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.