தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் , முஸ்லீம் ராஸ்ட்ரிய மஞ் என்ற அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளரான பாத்திமா அலி அந்த படத்தை பார்த்து விட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி.... தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தவ் கீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றகழகம், எஸ்,டிபிஐ, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மற்றும் சென்னையில் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தியாகராய நகரில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கிற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தி கேரளா ஸ்டோரி பேனர் கிழித்து எறியப்பட்டது.
தி கேரளா ஸ்டோரி படத்தின் மூலம் தங்கள் சமூகத்துக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பபடுவதாக வழக்கறிஞர் ஜெயினுலாபுதீன் குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், தி கேரள ஸ்டோரி படத்தை பார்த்த, முஸ்லீம் ராஸ்ட்ரிய மஞ் என்ற அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளரான பாத்திமா அலி என்பவர் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.