சிதம்பரம் நடராஜர் கோயில் குழந்தை திருமண விவகாரத்தில், சிறுமிகளிடம் கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆங்கில நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி அளித்திருந்தார். அதில், குழந்தை திருமணம் தொடர்பாக ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவிகளிடம் தடைசெய்யப்பட்ட கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும், அதனால் சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டதாக OPINDIA என்ற வலைபக்கத்தில் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது.
இதனைக் குறிப்பிட்டு தலைமை செயலாளர் இறையன்புவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.