சென்னையில் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை பூர்வீகமாக கொண்ட துரை- இந்திராணி தம்பதி திருவொற்றியூரில் வசித்து வந்தனர்.
ஆரம்பத்தில் பாத்திர கடையில் பார்த்து வந்த துரை கடந்த 11 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேர குடிகாரராக சுற்றியுள்ளார். பேக்கரியில் வேலை செய்து தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்த இந்திராணி, கணவனை வேலைக்கு செல்ல கூறி உள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துரை வீட்டிலிருந்த உலக்கையை எடுத்து மனைவி இந்திராணியை தாக்கிக் கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவொற்றியூர் போலீசார் துரையை கைது செய்தனர்.