உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருள, மதுரை மாசி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது.
அதிர்வேட்டுகள் முழங்க, பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வரும் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.