தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் குறிப்பிட்ட கட்சியின் கொடியை தேரில் கட்ட வேண்டுமெனக் கூறி ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தேரோட்டத்தின்போது அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறி அவர்கள் தேரில் கட்சிக் கொடியை கட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன், கைகலப்பில் காவலரின் சட்டை கிழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல மணி நேர தாமதத்திற்கு பின் தேர் நிலைக்கு வந்தது.