விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் முதல் இரண்டு இடங்களை சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் தட்டிச் சென்றனர்.
தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்ற 15 அழகிகள் இதில் பங்கேற்றனர்.
நடை, உடை, பாவனை போன்றவற்றை சிறப்பாக வெளிப்படுத்திய சென்னைநிரஞ்சனா முதலிடத்தையும், நிஷா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். சேலம் சாதனா மூன்றாம் இடத்துக்கு வந்தார்.