தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ஆத்திக்காடு பகுதியைச் சேர்ந்த மக்கள், நகராட்சி தூய்மைப் பணியாளர்களை அழைத்து விருந்து வைத்து கௌரவித்தனர்.
23 வார்டுகள் கொண்ட ராமேஸ்வரம் சுற்றுலா தலம் என்பதால் அங்கு நாள்தோறும் ஏராளமான குப்பைகள் சேர்கின்றன.
அவற்றை தினசரி அகற்றி நகரைத் தூய்மையாக வைத்திருக்கும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக தனியார் மண்டபத்தில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விருந்துக்கு வந்த தூய்மைப் பணியாளர்களை பன்னீர் தெளித்தும் மலர்கள் தூவியும் வரவேற்று ஆத்திக்காடு மக்கள் உணவு பரிமாறினர்.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி மன்றத் தலைவர் தாரா சுதாகர் தனது சொந்த செலவில் தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்து வைத்ததுடன், 36 பணியாளர்களுக்கு புதிய செல்போன்களையும் வழங்கினார்.