கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கும் விலைக்கே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிங்கராஜ் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளரை சந்தித்த அவர், முட்டையின் விலை இனி தினசரி நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.