நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர் நலன் காக்க, தமிழக அரசு என்றென்றும் பாடுபடும் எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில், "உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.
தேனீக்கள் காடுகள் தோறும் தோட்டங்கள் தோறும் சுற்றிச் சுழன்று தேனை சேகரித்து வந்து கூடுகளை அமைப்பது போல், தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்துக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குகின்றனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும் அவர்களின் உழைப்பைப் போற்றுவதும் உரிமைகளை உறுதி செய்வதும் நம்முடைய பொறுப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.