வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உரிய பாதுகாப்பின்றி மலையில் தேன் எடுக்கச் சென்ற சிறுவர்களை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள், புள்ளிங்கோ சிகை அலங்காரத்தில் இருந்த இரு சிறுவர்களின் தலைமுடிக்குள் புகுந்து கொண்டதால் மொட்டை அடித்து தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டன...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில் உள்ள மலையில் மோகன் பாபு என்ற இளைஞருடன் தேன் எடுக்கச் சென்ற சிறுவர்கள் தான் தேனீக்களின் உக்கிரமான தாக்குதலுக்குள்ளானவர்கள்..
எந்தவிதமான பாதுகாப்பு நடைமுறையையும் பின்பற்றாமல் , கடையின் கல்லாவில் இருந்து காசு திருடுவது போல , தேன் கூட்டில் கைவைத்து தேன் எடுக்க முயன்ற போது கூட்டில் இருந்து கலைந்த ஏராளமான மலைத் தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதாக கூறப்படுகின்றது. சிறுவர்களின் உடலில் இருந்த கொடுக்குகள் ஒவ்வொன்றாக பிடுங்கி அகற்றப்பட்டன..
முன்னதாக அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி வந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இரு சிறுவர்கள் முகமெல்லாம் வீங்கி ஒரு சைசாக காட்சி அளித்தனர்..
புள்ளிங்கோ போல நீண்ட தலைமுடியுடன் காணப்பட்ட இருவரது தலை முடிக்குள் அதிகளவு தேனீக்களும் கொடுக்குகளும் சிக்கி இருந்ததால், அவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது..
புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலுடன் வந்த இருவர் மொட்டை தலையுடன் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...