தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தின்போது கடந்த வாரம் இடிந்து விழுந்த ஆதாம் பாலம் குறித்து அமமுக உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.அதற்கு அதிமுக ஆட்சியில் கட்டிய பாலமும் தான் இடிந்தது என திமுக உறுப்பினர்கள் பதில் அளித்தனர். அதனைக் கேட்டு அதிமுக உறுப்பினர்கள் பேச முயன்றபோது, அவர்களின் மைக் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினரிடையே கைகலப்பு உண்டானது. இதனால் கூட்டம் நிறைவடைந்துவிட்டதாகக் கூறி மேயர் ராமநாதன் அங்கிருந்து எழுந்து சென்றார். தொடர்ந்து திமுக உறுப்பினர்களின் செய்கையை கண்டித்து, அதிமுக, அமமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் மாமன்ற கூட்ட அறையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.