12 மணி நேர வேலைச் சட்ட திருத்த மசோதா மீதான மேல்நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கிடும் நோக்கத்தில் மட்டுமே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், இந்த சட்ட முன்வடிவு நடைமுறைக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படக் கூடிய சிக்கல்கள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் எடுத்துரைத்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, சட்ட முன்வடிவின் மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, அரசுடன் தொழிற்சங்க பிரதிநிகள் சட்டத்திருத்த மசோதா குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிலுள்ள சிக்கல்களை களைய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.