ரேஷன் அல்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை எக்காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது என உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் மாத முடிவில் 13 ஆயிரத்து 443 கோடி ரூபாய்க்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரேசன் கடைகளில் மக்கள் விரும்பும் பொருட்களை வாங்கலாம் என்றும், விருப்பமில்லை என்றால் வாங்கத் தேவையில்லை என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.