திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை வீடியோ காலில் நேரடியாக பார்த்தாக கூறப்படும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் மருதூரைச் சேர்ந்த அர்ச்சனா நன்னிலத்தில் தங்கியிருந்து தனியார் நிதி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த நிலையில் கடந்த 12ம் தேதி தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து, அவர் கடைசியாக செல்போனில் பேசிய நாகை மாவட்டம் வடகாட்டைச் சேர்ந்த சத்யராஜிடம் போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது சத்யராஜ்க்கு உறவுக்கார பெண் ஒருவருடன் புதிதாக காதல் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
இதன் காரணமாக இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறின் போது தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்வதாக அர்ச்சனா கூறிய போது அதனை வீடியோ காலில் லைவ் செய்யுமாறு சத்யராஜ் கூறியதால் வீடியோ காலை ஆன் செய்து விட்டு அர்ச்சனா தூக்கில் தொங்கியதும் தெரிய வந்தது.