விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபால் மைதானத்தில் உள்ள கழியில் சட்டையால் தூக்கிட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காரை பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான தணிகைவேல் திங்கட்கிழமை காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் ஊருக்கு வெளியே வாலிபால் விளையாடப்படும் இடத்தில் தணிகைவேல் சடலமாக தொங்குவதாக அனந்தபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்குச் சென்ற போது, இளைஞர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்து சடலத்தை கீழே இறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.