கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமண விவகாரத்தில் மாமனாரால் கொடூரமாக வெட்டப்பட்ட இளம்பெண் அனுசுயாவின் தந்தை, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுசுயா, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் சேலம் எண் 3 மாஜிஸ்ட்ரேட் தங்க கார்த்திகா சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் பெற்றுச் சென்றார்.
இந்த நிலையில், மகளுக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் அனுசுயாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கவலையோடு தெரிவித்துள்ளார்.