அதிமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லவில்லை என்றும் தைரியம் இருந்தால் தங்களது கட்சியின் பெயரை சொல்லிப் பார்க்கட்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார்.