தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கஞ்சா போதை இளைஞர்கள் சிலர் காவல் நிலையத்தை சூறையாடி அரசு வாகனங்களைத் தாக்கினர்.
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு வடகரை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து கொண்டாடி வந்தனர்.
அப்பகுதியில் இருந்த சில கஞ்சா போதை இளைஞர்களுக்கு நடுவே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் சமாதானப்படுதத முயன்ற நிலையில், போதையில் இருந்தவர்கள் திடீரென காவல்நிலையத்திற்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அங்கிருந்த காவல்துறை வாகனங்களையும் 108 ஆம்புலன்ஸையும் நொறுக்கிய அந்தக் கும்பல் தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியும் உடைத்தனர். இதனையடுத்து அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட கஞ்சா நபர்களைக் கைது செய்தனர்.