திருவள்ளூர் அருகே, அதிகாலை பிரியாணி சாப்பிடுவதற்காக சென்ற இளைஞர்களின் கார், மினி பேருந்து மீது மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்.
அரக்கோணத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், அதிகாலையில் பிரியாணி சாப்பிடுவதற்காக சென்னை புளியந்தோப்பு பகுதி நோக்கி காரில் சென்ற போது, இருளஞ்சேரி பகுதி அருகே தொழிற்சாலையில் இருந்து பெண் ஊழியர்களை ஏற்றி வந்த மினி பேருந்து மீது மோதியது.
இதில், காரில் சென்ற 3 இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைந்தனர்