திரைப்படப் பாடலாசிரியர் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு இன்று 92-வது பிறந்தநாள். காலங்களைக் கடந்து நிற்கும் அவரது பாடல்கள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்....
பட்டுக்கோட்டை அருகே சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிகையில் பணியாற்றிய அவர், படித்த பெண் படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி நாடோடி மன்னன், மன்னாதி மன்னன், சக்ரவர்த்தி திருமகள், திருடாதே போன்ற 7 எம்ஜிஆர் படங்களுக்கு பாடல்களை எழுதினார்..
நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில், எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்திற்காக பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்...
பொறுப்புள்ள மனிதர்களின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகள் தூங்குவதாக அவர் எழுதிய பாடல் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமைந்தது..
இயக்குனர் ஸ்ரீதர். நடிகர் சிவாஜி கணேசன் போன்றோரின் படங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமடைந்தன.
29 வயது வரை வாழ்ந்த அவர், 250 பாடல்கள் மட்டுமே எழுதியிருந்தாலும் அவையனைத்தும் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. சமூக அக்கறையுள்ள பாடல்களால் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்