விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழ்நாடு காவல்துறையின் பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி, அதில் தவறான தகவல்களை பரப்பிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருத்தங்கலைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ்ச்செல்வன் கட்டட வேலை செய்து வரும் நிலையில், தமிழ்நாடு போலீஸ் என்ற பெயரில் முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி முகப்பில் காவல்துறை இலட்சினையையும் வைத்ததால், அதனை உண்மை என நம்பி சுமார் 46 ஆயிரம் இந்தக் குழுவில் இணைந்துள்ளனர்.
அந்த முகநூல் பக்கத்தில் காவல்துறைக்கு தொடர்பற்ற பல்வேறு தவறான பதிவுகள் இருந்த நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு தமிழ்ச்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.