அமைச்சர்கள் தங்களது பகுதிகளில் குறுநில மன்னர்கள் போல செயல்பட வேண்டும் என்ற சுயநலத்திற்காக பெரிய மாவட்டங்களை பிரிக்க முன்வருவதில்லையென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அன்புமணி, பெரிய மாவட்டங்களை பிரித்தால் மட்டுமே வளர்ச்சியடையும் என்பதால் கடலூர், திருச்சி, கோவை, தூத்துக்குடி மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிலக்கரி சுரங்கம் வராது என மத்திய அமைச்சர் கூறவில்லை, அதற்கு மாறாக ஏல பட்டியலில் இருந்து விலக்கி விடுகிறோம் என்று மட்டுமே ட்வீட் செய்துள்ளார். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டம் மட்டுமே டெல்டா என நினைத்து கொண்டிருக்கிறார் முதல்வர்.
தமிழகத்தில் 6 நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதலை நிறுத்த வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்