அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்வராக வேண்டி, காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, தனது குடும்பத்துடன், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னிச் சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
கோவில் தெப்பக்குளத்தில் இருந்து கஞ்சா கருப்பு அக்னிச் சட்டி ஏந்தி வர, அவரது மனைவி பால்குடம் சுமந்தும் அவரது மகன் வேப்பிலை ஆடை அணிந்தும் கோவிலை சுற்றி வலம் வந்து வழிபாடு செய்தனர்.