காஞ்சிபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய ஆறு சிறுமிகளில் 2பேர் மீட்கப்பட்டனர்.
பிள்ளையார்பாளையம் அருகே இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் நேற்று முன்தினம் இரவு பாதுகாவலர் அறையை பூட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமிகளை தேடி வந்த நிலையில் தங்களின் வீடுகளுக்கு சென்ற 2 சிறுமிகளை அவர்களின் பெற்றோர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
மீதம் உள்ள 4 சிறுமிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் அஜாக்கிரதையாக இருந்த காப்பக உதவியாளர் தீனா தேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.