விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் ராக்கெட் திட்டத்தின் L110 விகாஷ் இஞ்சின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் முன்னிலையில் 240 வினாடிகள் நடைபெற்ற இச்சோதனை ஓட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
2024-ம் ஆண்டு மத்தியில் நடைபெற உள்ள இந்த ஆளில்லா விண்கலத்தில் அனுப்புவதற்காக 'வியோமா மித்ரா' என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தயார் செய்திருக்கிறது. அந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும்.