நாட்டின் 40 விழுக்காடு காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை, வெளிநாட்டிலிருந்து வந்த நிதி மூலம் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்குள் கொண்டுவரப்படும் நிதியானது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
கூடங்குளம் அணு மின் நிலையம், கேரளாவின் விளிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும்போது வெளிநாட்டு சக்திகள் மூலம் பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஆளுநர் கூறினார்.