காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒரு துணைத் தலைவரின் அதிகாரங்களை நிறுத்தி வைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிசிடிவி கேமரா பொறுத்துவதில் முறைகேடு மற்றும் சிறிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியது உள்ளிட்ட புகாரில் மாத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் கோபி, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
ஐயங்கார்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரமூர்த்தி வீடுகட்டுவதற்கு அனுமதி வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த புகாரையடுத்து உத்தரவிட்டுள்ள ஆட்சியர் ஆர்த்தி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இது தொடரும் என தெரிவித்துள்ளார்.