கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பள்ளி மாணவர்கள் அதிவேகமாக ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை சாலையின் நடுவில் நின்று நிறுத்த முயற்சி செய்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாகனம் மோதி கீழே விழும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் போக்குவரத்து உதவியாளர் சிவகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரே இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.
அவர்கள் தூரத்தில் வருவதை பார்த்துவிட்டு சிவக்குமார் குறுக்கே சென்று மறிக்க முயற்சிக்க, அவரைப் பார்த்துவிட்டு மாணவர்கள் வாகனத்தின் வேகத்தை மேலும் அதிகரிக்க, அருகில் வந்த வாகனம் சிவக்குமார் மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவக்கு