கிறிஸ்தவ மக்களின் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது.
கிறிஸ்தவ மக்களின் 44 நாட்கள் தவக்காலம் கடந்த பிப்ரவரி 22 அன்று சாம்பல் புதனுடன் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கிறிஸ்தவ மக்கள் பவனியாக வந்து தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் பங்கேற்றனர்.