புதுச்சேரி அடுத்த கன்னியகோவிலில் அதிகாலையில் கோலம் போடுவதற்காக , கோலமாவு டப்பாவை திறந்த போது அதற்குள் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு பெண் கூச்சலிட்டதால், அந்த பாம்பு பிடிக்கப்பட்டது
கடலூர் - புதுச்சேரி எல்லையில் உள்ள கன்னியகோவில் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம். தனியார் தொழிற்சாலையில் மேலாளராக உள்ள இவரது மனைவி தினமும் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவதை வழக்கமாகக் வைத்திருந்தார் .
கோலமாவுகள் அடங்கிய டப்பாவை காலணிகள் வைக்கும் ஸ்டாண்டில் வைத்திருந்தார். சனிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் கோலமாவு டப்பாவை எடுத்த மகாலிங்கத்தின் மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக மகாலிங்கம் சமூக ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, விரைந்து வந்த அவர் அந்த வீட்டிற்கு சென்று காலணி வைக்கும் சாண்டில் பாம்பை தேடினார்
அவர்கள் சொன்னபடி கோலமாவு டப்பாவை எடுத்து பார்த்தபோது சிறுசிறு பாக்கெட்டுக்கள் அடங்கிய கோலமாவு பொட்டலங்களுக்கு அடியில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டார்
அந்த நாகப் பாம்பை , செல்லா முடிக்க முற்பட்டபோது அது சுமார் 2 அடி உயரத்திற்கு படம் எடுத்து ஆடியபடி சீற்றத்துடன் காணப்பட்டது
தொடர்ந்து சீற்றத்துடன் காணப்பட்ட அந்த பம்பை லாவகமாக பிடித்து சிறிய டப்பாவில் அடைத்து காப்பு காட்டில் கொண்டு போய் விட எடுத்துச்சென்றார் செல்லா.
கவன குறைவாக கோலமாவு டப்பாவை எடுத்து இருந்தால் நிச்சயமாக இந்த பாம்பு கடித்திருக்கும், நல்வாய்ப்பாக அந்தப்பெண் உயிர் தப்பியதாக தெரிவித்த செல்லா அதிகாலையில் கோலம் போட செல்பவர்கள் கூடுமானவரை விளக்குகளை எரியவிட்டு எச்சரிக்கையுடன் கோலமாவு டப்பாவுக்குள் பூச்சிகள் ஏதாவது உள்ளதா என்று பார்த்த பின்னர் அதன் உள் கைவிடுவது கூடுமானவரை நல்லது என்றார்.