நாகப்பட்டினத்தில் சொத்து தகராறில் வழக்கறிஞரை அரசு ஊழியர் கத்தியால் குத்திய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதவாகியுள்ளது.
வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் தயாளன். வழக்கறிஞரான இவருக்கும், வேளாண்மை துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிவரும் உறவினரான சரவணன் என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தயாளன் நண்பருடன் தனது வீட்டின் முன்பு பேசிக்கொண்டிருந்தபோது, சரவணன் தனது நண்பர் கண்ணனுடன் காரில் வந்து தயாளனை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதனை தடுக்க வந்த தயாளனின் நண்பரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
காயமடைந்த இருவரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், கத்தியால் குத்திய சரவணன் மற்றும் அவரது நண்பர் கண்ணனை போலீசார் கைதுசெய்தனர்.