திண்டுக்கல் அருகே, மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்வதாக கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த மாந்திரீக தம்பதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அருள் மணிகண்டன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பரிகாரம் செய்வதாக கூறி அவரது மனைவியிடம் தேவதானப்பட்டியை சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகரன் அவரது மனைவி விஜி ஆகியோர் 65 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர்.
அருள் மணிகண்டனின் மனநிலையில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் அவரது மனைவி உள்ளிட்டோர் ஜோதிடரிடம் இதுபற்றிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் மாந்திரீக தம்பதி உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் ஒருவரைத் தேடி வருகின்றனர்.