200 கோடி ரூபாயில், வ.உ.சி. துறைமுகத்திற்கான 6 வழிச்சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம், தூத்துக்குடி பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
கல்லூரி ஆண்டுவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு விமான நிலையத்தில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களை எதிர்க்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை புரிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.