அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தும் வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். கட்சிப் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோரை கொண்ட 2 நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.