கடலூர் மாவட்ட கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
லக்னோவிலுள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்தின் விஞ்ஞானி கந்தராஜன், முனைவர் பட்ட மாணவர் கோடீஸ்வரன் ஆகியோர் சிதம்பரம் அருகிலுள்ள முடசலோடை மீன் இறங்கு தளத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது வித்தியாசமான விலாங்கு வகை மீனை கண்டுபிடித்து, அதனை பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் மரபணு சோதனைக்கு உட்படுத்தினர்.
ஆராய்ச்சியின் முடிவில் அந்த மீன் புதிய வகை என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் ஜிம்னோ தோராக்ஸமினா டென்சிஸ் (Gymnothoraxaminadensis) என பெயரிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.