வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒரு தொகுதியில் மட்டும் 132 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, ஒடுக்கத்தூர் பகுதியில் கூடுதலாக ஒரு 110 கிலோ வாட் மின்மாற்றி அமைத்துத் தர வேண்டும் என்றும் கத்தரிக்குப்பம் பகுதியில் துணைமின் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேண்டுகோள் வைத்தார்.
வனப்பகுதி என்பதால் அங்கு அனுமதி கிடைப்பதில் தாமதமாவதாகக் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இருப்பினும் துணை மின் நிலையம் அமைக்க விரைந்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.