தமிழ்நாட்டில் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுகுறித்து பதில் அளித்து பேசிய அவர், இத்திட்டத்தால் மீனவ பெண்கள், கட்டுமான பெண் தொழிலாளர்கள், நடைபாதை வணிக பெண்கள், வீடுகளில் பணிபுரியும் பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைவார்கள் என்றார்.
இத்திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை நேரடியாக செலுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.