அதிமுகவில் தன்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள் என்றும், தான் இல்லை என்றாலும் இன்னொருவர் ஆள்வார் என்றும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை, அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியாது என்றார்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.